தேசியம்
செய்திகள்

Toronto கல்வி சபையின் துணைத் தலைவராக தமிழர் தெரிவு

Toronto கல்வி சபையின் துணைத் தலைவராக தமிழரான நீதன் சான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட Toronto கல்வி சபை உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை (15) பதவி ஏற்றனர்.

இந்த பதவி ஏற்பு நிகழ்வின் ஒரு பகுதியாக கல்வி சபையின் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இதில் துணைத் தலைவராக Scarborough Center தொகுதியில் கல்வி சபை உறுப்பினராக வெற்றி பெற்ற நீதன் சான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தவிரவும் Scarborough North தொகுதியில் கல்வி சபை உறுப்பினராக மீண்டும் தெரிவான யாழினி ராஜகுலசிங்கம், Scarborough-Agincourt தொகுதியில் கல்வி சபை உறுப்பினராக மீண்டும் தெரிவான அனு ஸ்ரீஸ்கந்தராஜா ஆகிய தமிழர்களும் நேற்று பதவி ஏற்றுள்ளனர்.

Related posts

முதலாவது Moderna தடுப்பூசி ஏற்றுமதி கனடாவை வந்தடைந்தது

Lankathas Pathmanathan

தமிழர்களின் திரையரங்கில் இரண்டு மாத காலத்தில் நான்கு முறை துப்பாக்கி சுடு

Lankathas Pathmanathan

உக்ரைன் தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வர சீனா ஆக்கபூர்வமான பங்கு வகிக்க வேண்டும்: கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment