போலந்து மீதான ரஷ்ய ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக வெளியாகும் அறிக்கைகள் குறித்து கண்காணித்து வருவதாக கனடிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
NATO நட்பு நாடு மீது ரஷ்ய ஏவுகணைகள் தாக்குதல் மேற்கொண்டதில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக வெளியான தகவல் தொடர்பாக போலந்து அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் செவ்வாய்கிழமை 915) பிற்பகல் தெரிவித்தார்.
இந்த தாக்குதல் தொடர்பான தகவல்களை பெறுவதாக கூறிய அமைச்சர் ஆனந்த், போலந்து நட்பு நாடுகளுடன் மிக நெருக்கமாக தொடர்பில் இருப்பதாகவும் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் கருத்து தெரிவிப்பது விவேகமற்றது எனவும் அமைச்சர் அனிதா மேலும் கூறினார்.
பிரதமர் Justin Trudeau, வெளியுறவு அமைச்சர் Melanie Joly ஆகியோர் நட்பு நாடுகளுடன் தொடர்பில் உள்ளதாக துணைப் பிரதமர் Chrystia Freeland கூறினார்.
நிலைமையை கண்காணித்து வருவதாக கனடிய வெளிவிவகார அமைச்சு செவ்வாய் இரவு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
Trudeau, Joly ஆகியோர் இந்தோனேசியாவில் நடந்த G20 உச்சிமா நாட்டில் செவ்வாயயன்று கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏவுகணை தாக்குதல்களுக்கு வெளிப்படையான கண்டனத்தை வெளியிடுவதாக Conservative கட்சியின் பாதுகாப்பு விமர்சகர் தெரிவித்தார்.