தேசியம்
செய்திகள்

குழந்தைகளுக்கான காய்ச்சல் மருந்துகளை இறக்குமதி செய்யும் Health கனடா

மேலதிகமான குழந்தை மருந்துகளின் விநியோகத்தை வெளிநாடுகளில் இருந்து பெற்றுள்ளதாக Health கனடா கூறுகிறது.

குழந்தைகளுக்கான வலி, காய்ச்சல் மருந்துகளின் வெளிநாட்டு விநியோகத்தை பெற்றுள்ளதாக Health கனடா திங்கட்கிழமை (14) அறிவித்தது.

சுவாச நோய்களின் அதிகரிப்புக்கு மத்தியில், தங்கள் குழந்தைகளுக்கான மருந்துகளுக்கு பெற்றோர்கள் தொடர் சவால்களை எதிர்கொள்ளும் நிலையில் திங்களன்று இந்த அறிவித்தல் வெளியானது.

வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் இந்த விநியோகத்தை வரும் வாரங்களில் சமூக மருந்தகங்களில் பெறமுடியும் என Health கனடா அறிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்புகளின் அனைத்து மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன என Health கனடா உறுதிப்படுத்துகிறது.

Related posts

COVID தளர்வு நடவடிக்கைகளை பிற்போடும் Alberta!

Gaya Raja

Modernaவின் Omicron இலக்கு கொண்ட தடுப்பூசியை Health கனடா அங்கீகரித்தது

Lankathas Pathmanathan

பிரதமருடன் சந்திக்க Atlantic மாகாணங்களின் முதல்வர்கள் அழைப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment