ஈரானிய ஆட்சியின் உயர்மட்ட அதிகாரிகள் கனடாவுக்குள் நுழைவதற்கு மத்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
மத்திய அமைச்சரவை அமைச்சர்கள் திங்கட்கிழமை (14) மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பின் போது இதனை உறுதிப்படுத்தினர்.
அரிதாகப் பயன்படுத்தப்படும் சட்டம் மூலம் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை எல்லை அதிகாரிகள் வெளிநாட்டினரை கனடாவுக்குள் அனுமதிப்பதை மறுக்க அனுமதிக்கிறது.
ஒரு மாதத்திற்கு முன்னர் வாக்குறுதியளிக்கப்பட்ட குடிவரவு, அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட நடவடிக்கை தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த சட்டம் ஏற்கனவே கனடாவில் இருக்கும் ஈரானிய அதிகாரிகளை விசாரிக்க கனேடிய அதிகாரிகளை அனுமதிக்கிறது என அமைச்சர்கள் உறுதிப்படுத்தினர்.