உளவு பார்த்த குற்றச்சாட்டில் Hydro-Quebec ஊழியரை RCMP கைது செய்துள்ளது.
வர்த்தக இரகசியங்களை சீன அரசாங்கத்திற்கு விற்றதாகக் கூறி Montréal பகுதி Hydro-Quebec ஊழியரை RCMP திங்கட்கிழமை (14) காலை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட 35 வயதான Yuesheng Wang, செவ்வாய்க்கிழமை (15) நீதிமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.
இவர் கனடாவின் பொருளாதார நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், சீன மக்கள் குடியரசிற்கு பயனளிக்கும் வகையில், வர்த்தக இரகசியங்களை பெற்றதாக கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர் 2016 முதல் Hydro-Quebec ஊழியர் என தெரியவருகிறது