February 23, 2025
தேசியம்
செய்திகள்

பாடசாலைக்குள் சந்தேகத்திற்குரிய வகையில் நடந்து கொண்ட இளைஞர் கைது

Montreal தெற்கே உள்ள CEGEP de Saint-Jean-sur-Richelieu கல்லூரி பூட்டப்பட்டதை அடுத்து, 19 வயதான இளைஞரும் 18 வயதிற்கு உட்பட்ட பெண்ணும் வெள்ளிக்கிழமை (11) காலை கைது செய்யப்பட்டனர்.

பாடசாலைக்குள் ஒருவர் சந்தேகத்திற்குரிய வகையில் நடந்து கொள்வதாக காவல்துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் பாதுகாப்புக்காக பாடசாலை பூட்டப்பட்டது.

குறிப்பிட்ட ஆண் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அந்த நபருக்கும் கல்லூரிக்கும் தொடர்பு உள்ளதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

அதன் பின்னர் 18 வயதிற்கு உட்பட்ட பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் எந்த வகையான ஆயுதங்கள் அல்லது வெடிபொருட்கள் மீட்கப்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

ஆறு மாகாணங்களில் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

தனிமைப்படுத்தப்படும் பிரதமர் Trudeau!

Lankathas Pathmanathan

இலங்கை குடும்பத்தின் இறுதிச் சடங்கில் இரக்கத்திற்கான வேண்டுகோள்

Lankathas Pathmanathan

Leave a Comment