தேசியம்
செய்திகள்

பத்து நாள் தென்கிழக்கு ஆசியா பயணத்தில் பிரதமர் Trudeau

ஆழமான இந்தோ-பசிபிக் உறவுகளை இலக்காகக் கொண்ட உச்சிமாநாட்டிற்கு தென்கிழக்கு ஆசியாவுக்கு பிரதமர் Justin Trudeau பயணமானார்.

இந்த பயணத்தில் பணவீக்கம், பொருளாதாரம், உக்ரைன், சுற்றுச்சூழலுக்கான ஆதரவு போன்றவற்றில் பிரதமர் முக்கிய கவனம் செலுத்துவார் என அவரது அலுவலகம் கூறுகிறது.

முதலில் Cambodia தலைநகரில் நடைபெறும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்கவுள்ளார்.

திங்கட்கிழமை (14), உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் கூட்டமான G20 உச்சி மாநாட்டிற்கு பிரதமர் இந்தோனேசியாவுக்கு செல்ல உள்ளார்.

G20 மாநாட்டைத் தொடர்ந்து, ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு குழுவின் தலைவர்கள் சந்திப்பதற்காக பிரதமர் தாய்லாந் பயணமாகவுள்ளார்.

இறுதியாக Tunisiaவில் நடைபெறும் Francophonie உச்சிமாநாட்டில் Trudeau பங்கேற்கிறார்.

Related posts

லெபனானில் மேலும் ஒரு கனடியர் பலி

Lankathas Pathmanathan

மூன்று மாகாணங்களில் கொடிய நுண்ணுயிர் தொற்று!

Lankathas Pathmanathan

Toronto தமிழ் இருக்கைக்கு ஒரு கோடி ரூபாய்கள் நிதி தமிழக அரசால் வழங்கல்

Lankathas Pathmanathan

Leave a Comment