பாடசாலைகள் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மீண்டும் முககவச கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது குறித்து Torontoவின் தலைமை மருத்துவர் ஆராய்ந்து வருகின்றார்.
குறிப்பாக பாடசாலைகளில் முககவச கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அவசரமாக ஆராய தலைமை சுகாதார மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
செவ்வாக்கிழமை (08) நடைபெற்ற மாதாந்த சுகாதார வாரிய கூட்டத்தின் போது, தலைமை மருத்துவர் இந்த பிரேரணையை முன்வைத்தார்.
சுவாச தொற்றுகள் பரவுவதைக் குறைப்பது, குழந்தை பராமரிப்பு சேவைகளின் உபயோகத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் முகக்கவச உத்தரவுகளை அறிமுகப்படுத்துவதில் உறுதியான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என Ontario சுகாதார அமைச்சு கூறியது.
கடந்த March மாதம் Toronto பாடசாலைகளில் முகக் கவச உத்தரவு கைவிடப்பட்டது.
பொது சுகாதார COVID வழிகாட்டுதல்கள் மாற்றமடைந்தால், பல Toronto பெரும்பாக கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் முக கவச கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்தலாம் என கூறியுள்ளன.