February 22, 2025
தேசியம்
செய்திகள்

சுகாதாரப் பாதுகாப்பு இடமாற்றங்களை அதிகரிக்கத் தயாராக உள்ளோம்: சுகாதார அமைச்சர்

மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்பு இடமாற்றங்களை அதிகரிக்கத் தயாராக இருப்பதாக மத்திய அரசாங்கம் அறிவித்தது.

ஆனால் அதிகார வரம்புகள் உலகத் தரம் வாய்ந்த சுகாதார தரவு அமைப்புகளை பின்பற்ற வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos தெரிவித்தார்

மாகாண, பிரதேசங்களின் சுகாதார அமைச்சர்கள் ஒரு செய்தியாளர் சந்திப்பை  நடத்துவதற்கு முன்னதாக Duclos இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சுகாதார இடமாற்றங்கள் 35 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டும் என மாகாண, பிரதேசங்களின் சுகாதார அமைச்சர்கள் கோருகின்றனர்
சுகாதாரப் பாதுகாப்பில் கணிசமான அளவு முதலீடு செய்வதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளது என பிரதமர் Justin Trudeau கூறினார்.

Related posts

காணாமல் போகும் நீதன் சானின் தேர்தல் பதாதைகள் குறித்து காவல்துறை விசாரணை

Lankathas Pathmanathan

Pickering சூதாட்ட மைய காவலாளி கொலையுடன் தொடர்புடைய வழக்கில் 17 வயது ஆணுக்கு பிடியாணை!

Lankathas Pathmanathan

Mississauga நகர முதல்வர் இடைத் தேர்தலில் 20 வேட்பாளர்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment