February 23, 2025
தேசியம்
செய்திகள்

Ontario மாகாணத்தில் முடிவுக்கு வரும் கல்வி ஊழியர்களின் வேலை நிறுத்தம்

Ontario மாகாணத்தில் மாணவர்கள் செவ்வாய்க்கிழமை (08) முதல் மீண்டும் பாடசாலைக்கு திரும்பும் நிலை தோன்றியுள்ளது .

கடந்த வெள்ளிக்கிழமை (04) முதல் முன்னெடுத்து வந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக திங்கட்கிழமை (07) CUPE அறிவித்தது.

Ontario அரசாங்கம் Bill 28 என்னும் மீண்டும் வேலைக்குச் செல்லும் மசோதாவை மீளப் பெறுவதாக அறிவித்த நிலையில் இந்த முடிவை CUPE எடுத்தது.
இந்த நிலையில் Ontario முழுவதிலும் உள்ள 55 ஆயிரம் கல்வி ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் செவ்வாய் முதல் தமது வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருகிறது.
மாணவர்கள் பாடசாலைக்கு திரும்புவதை உறுதி செய்வதற்காக  28ஆவது மசோதாவை அரசாங்கம் மீளப்பெறும் என முதல்வர் Doug Ford, கல்வி அமைச்சர்  Stephen Lecce ஆகியோர் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்  உறுதிப்படுத்தினர்.
மசோதா 28 முழுமையாக இரத்து செய்யப்படும் என கல்வி அமைச்சர் Lecce கூறினார்.

Related posts

வியாழக்கிழமை கட்சி தலைவர்களின் ஆங்கில மொழி விவாதம்!

Gaya Raja

Toronto விமான நிலைய தங்க கொள்ளையில் மற்றொரு சந்தேக நபர் கைது

Lankathas Pathmanathan

கனேடியரின் கொலையில் இந்தியாவின் பங்கு குறித்து கனடிய அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி

Lankathas Pathmanathan

Leave a Comment