தேசியம்
செய்திகள்

Freedom Convoy ஆர்ப்பாட்டத்திற்கு $25 மில்லியன் திரட்டப்பட்டது

Freedom Convoy ஆர்ப்பாட்டத்திற்கு திரட்டப்பட்ட பெரும்பாலான நிதி நன்கொடையாளர்களிடம் திருப்பி அனுப்பப்பட்டது அல்லது பறிமுதல் செய்யப்பட்டது என கூறப்படுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 25 மில்லியன் டொலர்கள் திரட்டப்பட்டதாக ஒரு விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றில் பெரும்பாலானவை நன்கொடையாளர்களிடம் திரும்பியது, அல்லது சிவில் வழக்கின் முடிவுகளுக்காக காத்திருக்கும் ஒரு வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது என தெரியவருகிறது.

16ஆவது நாளாக வியாழக்கிழமை (03) நடைபெற்ற பொது ஒழுங்கு அவசர ஆணையத்தின் பொது விசாரணைகளில் இந்த தகவல் வெளியானது.

திரட்டப்பட்ட நிதியில் சுமார் 1 மில்லியன் டொலர் ஆர்ப்பாட்டத்தின் பல்வேறு அமைப்பாளர்களால் செலவிடப்பட்டதாக ஆணையம் வெளியிட்ட ஒரு அறிக்கை கூறுகிறது.

சுமார் 18 மில்லியன் டொலர்கள் நன்கொடையாளர்களுக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

மற்றுமொரு நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் Liberal அரசு வெற்றி

Lankathas Pathmanathan

சிரியாவில் உள்ள கனடிய தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல்?

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment