தேசியம்
செய்திகள்

தமிழ் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மற்றொரு தமிழ் இளைஞர் குற்றவாளியென தீர்ப்பு!

25 வயதான தமிழ் இளைஞர் சாரங்கன் சந்திரகாந்தன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சரண்ராஜ் சிவக்குமார் குற்றவாளியாக நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டு Scarboroughவில் சாரங்கன் சந்திரகாந்தன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தில் Stouffville வாசியான சரண்ராஜ் சிவக்குமார் கைது செய்யப்பட்டார்.

கை மோசக் கொலை குற்றச்சாட்டில் சரண்ராஜ் சிவக்குமார் குற்றவாளியாக நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது.

அவர் மீது இரண்டாம் நிலை கொலை, கொலை முயற்சி ஆகிய வழக்குகள் முன்னர் பதிவு செய்யப்பட்டன .

பின்னர் இவர் மீதான குற்றங்கள் கை மோசக் கொலை என்ற நிலைக்கு தரம் இறக்கப்பட்டன.

சரண்ராஜ் சிவக்குமாருக்கான தண்டனை எதிர்வரும் January மாதம் 19ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

Related posts

இரண்டு தொகுதிகளில் Liberal, இரண்டு தொகுதிகளில் Conservative வெற்றி!

Lankathas Pathmanathan

83 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் Ontarioவில் தடுப்பூசியை பெற்றனர்!

Gaya Raja

அரசு ஊழியர்கள் மீண்டும் அலுவலகம் திரும்ப வேண்டும்

Lankathas Pathmanathan

Leave a Comment