December 12, 2024
தேசியம்
செய்திகள்

துணை பிரதமருக்கு எதிரான கொலை அச்சுறுத்தல் குறித்து சாட்சியம்

துணை பிரதமர் Chrystia Freelandடிற்கு எதிரான கொலை அச்சுறுத்தல் குறித்து அவசரகாலச் சட்ட விசாரணையில் சாட்சியமளிக்கப்பட்டது .
பொது ஒழுங்கு அவசர ஆணையத்தின் பொது விசாரணைகளின் புதிய அத்தியாயம் செவ்வாய்க்கிழமை (01) ஆரம்பமானது.
பல்வேறு பிரிவுகளுக்கு இடையே ஆரம்பித்த மோதல் Freedom Convoy எனப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தை திசை திருப்பியது என அமைப்பாளர் Chris Barber தனது சாட்சியத்தில்  கூறினார்.

தடுப்பூசி ஆணைகளுக்கு எதிராக அமைதியான போராட்டத்தை நடத்த மட்டும் தான் விரும்பியதாக அவர் அவசர ஆணையத்திடம் கூறினார்.

அதேவேளை துணை பிரதமருக்கு  எதிராக விடுக்கப்பட்ட கொலை மிரட்டலுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும்  Barber தெரிவித்தார்.

இது போன்ற வன்முறை அச்சுறுத்தல்களை கண்டிப்பதாகவும் அவர் விசாரணையில் தெரிவித்தனர்.

வாரக்கணக்கில் போராட்டம் நடத்திய நிலையில் February மாதம் 17ஆம் திகதி Barber கைது செய்யப்பட்டார்.

அவர் எதிர்வரும் September மாதம் தன் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

கறுப்பு ஜூலையின் 40 ஆம் ஆண்டை நினைவு கூறும் பிரதமர்

Lankathas Pathmanathan

Toronto நகரசபையினால் தமிழ்ச் சமூக மையத்திற்கான அமைவிடம் குறித்த அறிவிப்பு!

Lankathas Pathmanathan

McGill பல்கலைக்கழக பாலஸ்தீன ஆதரவு போராட்டம் கண்ணீர் புகை குண்டு வீசி கலைப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment