Ontario மாகாண இலையுதிர் கால பொருளாதார அறிக்கை எதிர்வரும் 14ஆம் திகதி வெளியாகவுள்ளது.
Ontario மாகாண நிதியமைச்சர் Peter Bethlenfalvy திங்கட்கிழமை (31) இந்தத் தகவலை வெளியிட்டார்.
கடந்த நிதியாண்டு 2.1 பில்லியன் டொலர் உபரியுடன் முடிவடைந்ததாக நிதி அமைச்சர் கடந்த மாதம் அறிவித்திருந்தார்.
வரவு செலவு திட்டத்தில் கணிக்கப்பட்ட 33 பில்லியன் டொலர் பற்றாக்குறையிலிருந்து இது பெருமளவு குறைவாக உள்ளது.