Scarboroughவில் உயர்நிலைப் பாடசாலைக்கு வெளியே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை (31) மாலை 3:30 மணியளவில் Woburn கல்லூரிக்கு வெளியில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்ததாக Toronto காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் பின்னர் மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.
காயமடைந்த இரண்டாவது ஆண் வைத்தியசாலைக்கு தானாகவே சென்றுள்ளார்.
இவரது நிலை குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இவர்கள் இருவரும் Woburn கல்லூரியின் மாணவர்கள் என மாணவர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்த சம்பவம் குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.