தேசியம்
செய்திகள்

கனடியப் பொருளாதாரத்தின் நிலை குறித்த அறிக்கை அடுத்த வாரம் வெளியாகும்

கனடியப் பொருளாதாரத்தின் நிலை குறித்த அறிக்கை ஒன்றை துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland எதிர்வரும் வியாழக்கிழமை (03) வெளியிடவுள்ளார்.

இலையுதிர் கால பொருளாதார அறிக்கை வெளியாகும் திகதியை நிதி அமைச்சு இன்று (28) அறிவித்தது.

கனடாவின் பொருளாதாரம் மந்தமடைந்து வரும் நிலையில் இந்த பொருளாதார நிலை குறித்த அறிக்கை வெளியாகவுள்ளது.

அடுத்த ஆண்டின் முதல் பாதியில் சாத்தியமான மந்த நிலை குறித்த முன்னறிவித்தலை இந்த வாரம் கனடிய மத்திய வங்கி வெளியிட்டது.

இந்த நிலையில் வெளியாகும் இலையுதிர் கால பொருளாதார அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Related posts

PEI: கட்டாய COVID தனிமைப்படுத்தல் நடைமுறை முடிவுக்கு வந்தது

Lankathas Pathmanathan

Torontoவில் எட்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

Lankathas Pathmanathan

British Colombia மாகாணத்திற்கான சிகப்பு எச்சரிக்கை: சுற்றுச்சூழல் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment