Ontarioவில் அமைக்கப்பட்டுள்ளதா க கூறப்படும் சீன காவல் நிலையங்கள் குறித்து விசாரித்து வருவதாக RCMP தெரிவித்தது .
சீன அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டதாக கூறப்படும் இந்த காவல் நிலையங்களில் நிகழும் குற்றச் செயல்கள் குறித்து விசாரித்து வருவதாக RCMP கூறுகிறது.
கனடாவில் வாழும் தனிநபர்களின் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்களை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்வதாக RCMP பேச்சாளர் தெரிவித்தார்.
காவல் நிலையங்கள் என அழைக்கப்படுபவை எங்கு அமைந்துள்ளன என்பதை RCMP குறிப்பிடவில்லை.
அதேவேளை புகாரளிக்கப்பட்ட குற்றச் செயல்களின் தன்மை குறித்த விவரங்களையும் RCMP வழங்கவில்லை.