அவசரகாலச் சட்ட விசாரணையில் பங்கேற்க மறுத்தது குறித்த கேள்விகளை எதிர்கொள்ள Ontario முதல்வர் Doug Ford மறுத்துள்ளார்.
இந்த சட்ட விசாரணை ஒரு மத்திய விசாரணையே தவிர ஒரு மாகாண விசாரணை அல்ல என அவர் புதன்கிழமை (26) நடைபெற்ற சட்டமன்ற கேள்வி நேரத்தின் போது Ford குறிப்பிட்டார்.
அவசரகாலச் சட்ட விசாரணையில் சாட்சியமளிப்பதை எதிர்த்து முதல்வர் நீதிமன்ற ஆவணங்களை தாக்கல் செய்திருந்தார்.
தனது மாகாணசபை சிறப்புரிமையை அவசரகாலச் சட்ட விசாரணையில் பங்கேற்க மறுத்ததிற்கு முதல்வர் காரணமாக்கினார் .
இந்த நிலையில் விசாரணையில் சாட்சியமளிக்க வேண்டாம் என்ற முதல்வரின் முடிவு கோழைத்தனமானது என Liberal கட்சி தலைவர் John Fraser விமர்சித்தார்