மந்தநிலையின் முன்னறிவிப்புகள் மத்தியில் கனடா நிதி விடயத்தில் பொறுப்புடன் இருக்க வேண்டும் என பிரதமர் Justin Trudeau கூறினார்.
கனடிய வங்கியின் முன்னாள் ஆளுநர் உட்பட முக்கிய அதிகாரிகள் பல உலகளாவிய காரணிகளால் கனடாவும் உலகமும் வரவிருக்கும் மாதங்களில் மந்த நிலையை நோக்கிச் செல்லும் என எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில் பணவீக்க நிவாரண நடவடிக்கைகளை தனது அரசாங்கம் எடுக்க முயற்சிக்கும் என கூறிய பிரதமர், அந்த ஆதரவுகள் இலக்கு வைக்கப்பட்டதாக இருக்கும் எனவும் கூறினார்.
நாடு விரைவில் பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ளப் போகிறது என இந்த வாரம் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.