இரண்டு வருட கற்றல் இடையூறுகளுக்கு பின்னர் பாடசாலை செலவை ஈடு செய்ய Ontario அரசாங்கம் பெற்றோருக்கு உதவி தொகை ஒன்றை அறிவித்துள்ளது.
குழந்தை ஒன்றுக்கு 200 அல்லது 250 டொலர்கள் உதவித் தொகையாக வழங்கப்படும் என கல்வி அமைச்சர் Stephen Lecce வியாழக்கிழமை (20) அறிவித்தார்.
18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட பெற்றோர் 200 டொலர் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
21 வயது வரையிலான சிறப்புக் கல்வித் தேவைகளைக் கொண்ட பாடசாலை குழந்தைகளைக் கொண்ட பெற்றோர் 250 டொலர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்ப படிவங்களை அடுத்த வருடம் March மாத இறுதி வரை பூர்த்தி செய்யலாம் என செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் Lecce அறிவித்தார்.
இந்த கொடுப்பனவுகள் கடந்த August மாதம் சிம்மாசன உரையின் போது அரசாங்கம் அறிவித்த 365 மில்லியன் டொலர்கள் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.