தேசியம்
செய்திகள்

Ottawaவில் போராட்டங்களில் குடியிருப்பாளர்கள் பாதிப்பு குறித்து சாட்சியம்

Ottawaவில் தொடர்ந்த போராட்டங்களால் குடியிருப்பாளர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பது குறித்து  வெள்ளிக்கிழமை (14) அவசரகாலச் சட்ட விசாரணையின் போது சாட்சியமளிக்கப்பட்டது.

கடந்த குளிர்காலத்தின் ‘Freedom Convoy’ போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர Justin Trudeau அரசாங்கம் அவசர காலச் சட்டத்தை உபயோகித்தது குறித்த ஆணையத்தின் ஆறு வாரகால பொது விசாரணை வெள்ளியன்று இரண்டாவது நாளாக தொடர்ந்தது.
வெள்ளிக்கிழமை இந்த ஆணையத்தின் விசாரணையின் ஒரு பகுதியாக, முதல் கட்ட சாட்சியம் நிகழ்ந்தது .
இந்த விசாரணைகள் போராட்ட காலத்தில் Ottawa நகரவாசிகளின் அனுபவங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இந்த பொது விசாரணை கடந்த வியாழக்கிழமை ஆரம்பமானது.

1988 இல் சட்டமாக மாறிய பின்னர் முதல் முறையாக அவசர காலச் சட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கையை February 14ஆம் திகதி பிரதமர் Justin Trudeau எடுத்தார்.

பிரதமர் Trudeau, பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino, துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland, அவசர தயார் நிலை அமைச்சர் Bill Blair உட்பட 7 அமைச்சர்களும் மூத்த அரசாங்க அதிகாரிகளும் இந்த விசாரணையில் சாட்சியமளிக்க உள்ளனர்.

Related posts

சுற்றுச் சூழல் கனடாவினால் நாடளாவிய ரீதியில் வானிலை எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Ontarioவில் 11 ஆயிரம் பேர் தொடர்ந்தும் மின்சாரம் இல்லாத நிலையில்

Lankathas Pathmanathan

விறுவிறுப்பாக தொடரும் தேர்தல் பிரச்சாரம்!

Gaya Raja

Leave a Comment