மந்தநிலை அச்சங்களுக்கு மத்தியில் உலக பொருளாதாரத்திற்கு ரஷ்யா மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாகும் என கனடிய துணை பிரதமர் கூறினார்.
உக்ரைனில் ரஷ்யாவின் யுத்தம் உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாகும் என நிரூபிக்கப்பட்டுள்ளதாக Chrystia Freeland தெரிவித்தார்.
உலக வங்கி குழு, சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த கூட்டங்களை தொடர்ந்து வெள்ளிக்கிழமை (14) Washingtonனில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் Freeland இந்த கருத்தை வெளியிட்டார்.
ரஷ்யா உக்ரைனில் இருந்து வெளியேறினால் உலகப் பொருளாதாரத்தை மிகவும் பாதுகாப்பானதாக மாற்ற முடியும் என அவர் கூறினார்.
உக்ரைனில் ரஷ்யாவின் போர் விரைவில் முடிவடைந்தால், அதன் தாக்கங்கள் உடனடியாக உணரப்படும் எனவும் Freeland நம்பிக்கை தெரிவித்தார்.