December 12, 2024
தேசியம்
செய்திகள்

இரண்டு தமிழர்கள் மரணமடைந்த விபத்து குறித்த மேலதிக விபரங்கள்

Markham நகரில் இரண்டு தமிழர்கள் மரணமடைந்த விபத்து குறித்த மேலதிக விபரங்களை York பிராந்திய காவல்துறையினர் வெளியிட்டனர்.

புதன்கிழமை (12) மாலை 2 மணியளவில் Markham Road and Elson Street சந்திப்புகளுக்கு அருகாமையில் இந்த விபத்து நிகழ்ந்தது.

மூன்று பேர் பயணித்த Acura வாகனத்துடன் பார ஊர்தி மோதியதாக காவல்துறையினர்தெரிவித்தனர்.

இந்த விபத்தில் 25 வயதுக்குட்பட்ட இருவர் பலியானதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாகனத்தின் சாரதியான 21 வயதான இளைஞனும், பின் இருக்கையில் பயணித்த 23 வயதுடைய பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

முன் இருக்கையில் பயணித்த மூன்றாவது பயணியான 52 வயது பெண் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவர் தொடர்ந்து மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் காவல்துறையினரால் வெளியிடப்படவில்லை.

ஆனாலும் பலியானவர்களும் காயமடைந்தவர்களும் தமிழர்கள் எனவும் இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், இரண்டு பிள்ளைகள் எனவும் தெரியவருகிறது.

46 வயதான பார ஊர்தியின் சாரதிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

விசாரணை தொடரும் நிலையில் விபத்துக்கான காரணம் எதனையும் காவல்துறையினர் வெளியிடவில்லை.

Related posts

ஒரே நாளில் மூன்றாயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் கனடாவில்

Lankathas Pathmanathan

குறுகிய பயணங்களுக்கான PCR சோதனை தேவைகள் நீக்கம்

Lankathas Pathmanathan

September மாதத்தின் பின்னர் அதிகுறைந்த தொற்றுக்கள் Ontarioவில் பதிவு!

Gaya Raja

Leave a Comment