Torontoவில் வீட்டின் சராசரி விலை கடந்த மாதம் 4.25 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த குளிர்காலத்தில் சொத்து மதிப்புகளில் சரிவு ஆரம்பித்ததில் இருந்து முதலாவது குறைவை இது குறிக்கிறது.
Toronto பிராந்திய Real Estate வாரியம் வெளியிட்ட சமீபத்திய தரவுகள், September மாதத்தில் சந்தை நிலவரம் நிலைபெறுவதற்கான அறிகுறிகளைக் காட்டியது.
வீடுகளின் சராசரி விலை ஒரு மில்லியன் 86 ஆறாயிரத்து 762 டொலர்களாக பதிவாகியுள்ளது.
இது முந்தைய மாதத்தில் ஒரு மில்லியன் 79 ஆறாயிரத்து 705 டொலராக இருந்தது.
இருப்பினும், கடந்த வருடம் Septmeber சராசரி விற்பனை விலை ஒரு மில்லியன் 135 ஆயிரத்து 27 டொலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கனடிய மத்திய வங்கி, இந்த ஆண்டு இதுவரை 0.25 சதவீதத்தில் இருந்து 3.25 சதவீதமாக அதன் முக்கிய வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.
இதன் மூலம் கடன் பெறும் செலவு கணிசமாக அதிகரித்துள்ளது.