தேசியம்
செய்திகள்

Alberta முதல்வர் இந்த வாரம் அறிவிக்கப்படுவார்

Alberta மாகாணத்தின் ஐக்கிய Conservative கட்சியின் புதிய தலைவரும், மாகாண முதல்வரும் வியாழக்கிழமை (06) அறிவிக்கப்படவுள்ளார்.

ஆளும் ஐக்கிய Conservative கட்சியின் தலைமைப் போட்டியின் முடிவுகள் எதிர்வரும் வியாழக்கிழமை Calgaryயில் அறிவிக்கப்படும்.

அஞ்சல் வாக்குச் சீட்டுகளை பெறுவதற்கான கடைசி நாள் திங்கட்கிழமையாகும்.

சுமார் 124 ஆயிரம் கட்சி உறுப்பினர்கள் தலைமை பதவிக்காக போட்டியிடும் ஏழு வேட்பாளர்களுக்கு இடையே வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வியாழனன்று Edmonton, Calgary, Red Deer, Slave Lake, Taber ஆகிய இடங்களில் கட்சி உறுப்பினர்கள் நேரில் வாக்களிக்க முடியும்.

Jason Kenneyயின் கட்சித் தலைவர் பதவியை வெற்றிபெறும் வேட்பாளர் Alberta அரசாங்கத்தின் தலைமை பதவியையும் ஏற்பார்.

Related posts

Ontarioவில் June மாதத்தின் ஆரம்பத்தின் பின்னர் அதிக எண்ணிக்கையில் தொற்றுக்கள்!

Gaya Raja

கடந்த ஆண்டு Conservative கட்சி விளம்பரத்திற்கு $8.5 மில்லியன் செலவு

Lankathas Pathmanathan

June மாதம் கனடாவில் 230,700 புதிய தொழில் வாய்ப்புகள்!

Gaya Raja

Leave a Comment