உண்மை, நல்லிணக்கத்திற்கான முதற்குடி கலைஞர்களின் வெளிப்பாட்டைக் கொண்ட நான்கு புதிய தபால் தலைகளை கனடா Post வெளியிடுகிறது.
கனடாவின் குடியிருப்புப் பாடசாலைகளின் வலிமிகுந்த பாரம்பரியம் குறித்த சிந்தனையை ஊக்குவிப்பதற்கான வருடாந்த வெளியீட்டுத் தொடரில் இது முதல் வெளியீடு என கனடா Post கூறுகிறது.
இந்த முத்திரைகள் ஒவ்வொரு படைப்பாளியின் பூர்வீக மொழியுடன் பொறிக்கப்பட்டுள்ளன.
வெள்ளியன்று (30) உண்மை, நல்லிணக்கத்திற்கான தேசிய தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக, வியாழக்கிழமை (29) இந்த தபால் தலைகள் வெளியிடப்படும்.