December 12, 2024
தேசியம்
செய்திகள்

வாடகை மோசடி விசாரணையில் தமிழர் கைது

வாடகை மோசடி விசாரணையில் தமிழர் ஒருவர் Toronto காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

43 வயதான விஜயரஞ்சன் இந்திரலிங்கம் என்பவர் திங்கட்கிழமை (26) கைது செய்யப்பட்டார்.

இவர் Facebook Marketplace ஊடாக 30 Gilder Drive, Scarboroughவில் உள்ள குடியிருப்பை வாடகைக்கு விளம்பரப்படுத்தினார்.

அவர் வாடகைக்கு விளம்பரப்படுத்திய இடத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார்

பாதிக்கப்பட்டவர்களுக்கு குடியிருப்பு காண்பிக்கப்பட்டதுடன் அந்த இடத்தின் உரிமையாளர் தான் எனவும் அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தினார்.

பாதிக்கப்பட்டவர்கள் வாடகைக்கு ஒப்புக்கொண்ட பின்னர், மின்னணு பணப்பரிமாற்றம் (electronic money transfer) உட்பட்ட வழிகளில் வைப்பு தொகை (deposit ) அனுப்பி வைக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் குடியிருப்புக்கு செல்லவேண்டிய திகதிக்கு சில நாட்களுக்கு முன்னர் பல்வேறு காரணங்களை முன்வைத்து அந்த திகதியை அவர் பிற்போட்டார்.

பின்னர் அவர் பாதிக்கப்பட்டவர்களின் அழைப்புகளுக்கு பதில் வழங்குவதை நிறுத்தினார்.

இந்த நிலையில் இவருக்கு எதிராக 12 குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

இவர் மீதான குற்றச்சாட்டுகள் எவையும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்னர் அல்லது வைப்பு தொகை (deposit ) வழங்கு முன்னர் அவதானமாக இருக்குமாறு காவல்துறை பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது.

 

Related posts

காய்ச்சல் பருவத்தின் உச்சத்தை கனடா எட்டியுள்ளது

Lankathas Pathmanathan

Conservative தலைவரை தெரிவு செய்யும் தேர்தலில் 679 ஆயிரம் உறுப்பினர்கள் வாக்களிக்கலாம்

Lankathas Pathmanathan

கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை விசாரணையில் மேலும் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் தமிழர்

Lankathas Pathmanathan

Leave a Comment