தேசியம்
செய்திகள்

COVID பயண விதிகளை விலக்க பிரதமர் முடிவு

COVID பயண விதிகளில் சிலவற்றை விலக்கும் முடிவை பிரதமர் Justin Trudeau ஆதரிப்பதாக தெரியவருகிறது.

கனடிய எல்லையில் கட்டாய COVID தடுப்பூசி தேவைகளை அமுல்படுத்தும் அமைச்சரவை உத்தரவை எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் முடிவுக்கு கொண்டுவர பிரதமர் Trudeau ஒப்புக் கொண்டுள்ளார்

ஆனாலும் புகையிரதங்களிலும் விமானங்களிலும் பயணிகள் முகமூடி அணிய வேண்டிய தேவையை தொடர்ந்தும் அமுல்படுத்த வேண்டுமா என்பது குறித்து அரசு விவாதித்து வருகிறது.

COVID தடுப்பூசி எல்லைக் கட்டுப்பாடுகளை இந்த மாத இறுதியில் கைவிட கனடா தீர்மானித்துள்ளதாக கடந்த சில நாட்களின் முன்னர் தகவல் வெளியானது.

இது குறித்த அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவித்தல் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் இந்த விடயத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என Trudeau அரசாங்கத்தின் இரண்டு அமைச்சர்கள் புதன்கிழமை (21) தெரிவித்திருந்தனர்.

தற்போதுள்ள எல்லைக் கட்டுப்பாடுகள் குறைந்தபட்சம் September 30 வரை அமுலில் இருக்கும் என்று June மாத இறுதியில் அரசாங்கம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

25 KG போதை பொருள் பறிமுதல் – இரண்டு கனடியர்கள் கைது

Lankathas Pathmanathan

Conservative கட்சி தலைமை வேட்பாளர்களின் இறுதி விவாதம்

Lankathas Pathmanathan

அமைச்சரவை மாற்றும் பிரதமர் Trudeau – தேர்தலுக்கு தயாராகின்றாரா?

Lankathas Pathmanathan

Leave a Comment