தேசியம்
செய்திகள்

Conservative கட்சி முன்னணியில்: புதிய கருத்து கணிப்பு

பிரதமர் பதவிக்கு Pierre Poilievreஐ விட Justin Trudeau அதிக கனடியர்களின் ஆதரவை பெற்றுள்ளதாக புதிய கருத்துக் கணிப்பொன்று தெரிவிக்கிறது.

புதிய Conservative தலைவரை விட பிரதமரின் ஆதரவு நிலையில் குறைந்த அளவிலேயே முன்னிலையில் உள்ளது.

Conservative தலைமைப் போட்டியில் Poilievre பெரும் வெற்றி பெற்ற 10 நாட்களுக்குப் பின்னர் இந்த கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகின.

ஆனால் கட்சி ரீதியாக Conservative கட்சி வாக்குப்பதிவு கண்காணிப்பில் முன்னணியில் உள்ளது,

August மாத ஆரம்பத்தில் இருந்து Liberal அரசாங்கத்தின் ஆதரவு ஐந்து புள்ளிகள் குறைந்துள்ளது என இந்த கருத்துக் கணிப்பு காட்டுகிறது.

Conservative கட்சியின் ஆதரவு ஆறு புள்ளிகள் அதிகரித்துள்ளது.

NDP கட்சியின் ஆதரவு இரண்டு சதவீதம் அதிகரித்துடன் கனடா மக்கள் கட்சியின் ஆதரவு இரண்டு சதவீதம் குறைந்துள்ளது.

Related posts

மூன்று நம்பிக்கை வாக்கெடுப்புக்களை எதிர்கொள்ளும் கனடிய அரசாங்கம்!

Gaya Raja

Carbon விலை உயர்வுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டங்கள்

Lankathas Pathmanathan

வட்டி விகிதத்தை 5 சதவீதத்தில் வைத்திருக்க மத்திய வங்கி முடிவு!

Lankathas Pathmanathan

Leave a Comment