December 12, 2024
தேசியம்
செய்திகள்

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 77வது கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கின்றார்!

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் மிக முக்கியமான வேலை, உலகிற்கு நம்பிக்கையை அளிப்பதாகும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான கனடாவின் தூதர் Bob Rae தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 77வது கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை (20) பிரதமர் Justin Trudeau கலந்து கொண்டார்.

New York நகரில் உள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உலகளாவிய வளர்ச்சி, உணவு பாதுகாப்பு ஆகியவற்றுக்கு Trudeau முன்னுரிமை அளிக்கின்றார்.

இந்த அமர்வில் கனடாவின் தூதுக்குழுவில் வெளிவிவகார அமைச்சர் மெலனி Mélanie Joly, ஐக்கிய நாடுகள் சபைக்கான கனடாவின் தூதர் Bob Rae ஆகியோரும் கலந்து கொள்கின்றனர் .

Trudeauவின் இரண்டு நாள் பயணமானது செவ்வாயன்று உலக நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புடன் ஆரம்பமானது.

Related posts

கனடிய டொலரின் பெறுமதி நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்தது

தடுப்பூசியை முழுமையாக பெறுவது தொற்றில் இருந்து முழுமையான பாதுகாப்பு பெறுவது என அர்த்தப்படாது: Theresa Tam

Gaya Raja

ஆசியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர்

Leave a Comment