தேசியம்
செய்திகள்

இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் அஞ்சலி

பிரதமர் Justin Trudeauவும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் வியாழக்கிழமை (15) நடைபெற்ற சிறப்பு நாடாளுமன்ற அமர்வில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தினர்.

இரண்டாம் எலிசபெத் மகாராணியை நினைவு கூறவும் மூன்றாம் சார்லஸ் மன்னரின் பதவி ஏற்பை குறிக்கும் வகையிலும் இரண்டு நாள் சிறப்பு அமர்வில் பங்கேற்பதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வியாழனன்று Ottawa திரும்பினர்.

திங்கட்கிழமை தேசிய நினைவேந்தல்களுக்கு முன்னதாக, இந்த அமர்வு வியாழக்கிழமை ஆரம்பமானது.

கனடாவின் நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரை கௌரவிக்கும் வகையில் காலை 10 மணிக்கு ஆரம்பித்த அமர்வில் பிரதமர் Trudeau முதலாவதாக உரை நிகழ்த்தினார்.

எலிசபெத் மகாராணி வழங்கிய சேவை, தலைமை ஆகியவற்றை அங்கீகரிக்க இந்த சந்தர்ப்பத்தை எடுத்துக் கொள்வதாக பிரதமர் தனது உரையில் கூறினார்.

புதிய Conservative தலைவர் Pierre Poilievre, பிரதமரை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உரையாற்றினார்.

Bloc Quebecois தலைவர் Yves-Francois Blanchet தனது இரங்கலைத் தெரிவித்த பின்னர் அவரும் அவரது கட்சியினரும் சபை அமர்வுகளில் இருந்து வெளியேறினர்.

பூர்வீக தலைவர்களால் முன்வைக்கப்பட்ட நல்லிணக்க சவாலை மூன்றாம் சார்லஸ் மன்னர் எதிர்கொள்வார் என தான் நம்புவதாக NDP தலைவர் Jagmeet Singh தனது உரையில் கூறினார்.

Related posts

British Colombiaவில் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர்

Lankathas Pathmanathan

Toronto பாடசாலைகளில் மீண்டும் முககவசம்?

Lankathas Pathmanathan

தமிழ் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் Laval மாநகர சபையில் நிறைவேறியது

Lankathas Pathmanathan

Leave a Comment