தேசியம்
செய்திகள்

காவல்துறை அதிகாரியை சுட்டுக் கொன்ற சந்தேக நபர் சுட்டுக் கொலை

Ontario மாகாண துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் Toronto காவல்துறை அதிகாரியை சுட்டுக் கொன்ற சந்தேக நபர் காவல்துறையினரால் கொல்லப்பட்டார்.

Toronto பெரும்பாகத்தில் Toronto காவல்துறை அதிகாரி உட்பட இரண்டு பேரைக் கொன்ற சந்தேக நபர் — சுட்டுக் கொல்லப்பட்டதாக Hamilton காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Mississauga நகரில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் Toronto காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

பயிற்சியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் Mississaugaவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்து காவல்துறை திங்கட்கிழமை (12) பிற்பகல் பொது எச்சரிக்கையை வெளியிட்டது,

ஆனால் மாலை இந்த எச்சரிக்கை இரத்து செய்யப்பட்டது.

பொதுமக்கள் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என Peel பிராந்திய காவல்துறை தெரிவித்தது.

Halton காவல்துறையினர் மற்றொரு துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்தி வருவதாக திங்கள் மாலை தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் 3 பேர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொல்லப்பட்டது.

ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், மேலும் இருவர் சிகிச்சைக்காக பிராந்திய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

கனடாவின் உதவிக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்: உக்ரைன் ஜனாதிபதி Zelenskyy

Lankathas Pathmanathan

நீண்டகாலம் எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மாற்றம்

Lankathas Pathmanathan

Ajax நகர வீதியில் அவசரமாக தரையிறங்கிய விமானம்

Lankathas Pathmanathan

Leave a Comment