Conservative கட்சியின் புதிய தலைமை குழுவை கட்சியின் புதிய தலைவர் Pierre Poilievre செவ்வாய்க்கிழமை (13) அறிவித்தார்.
அடுத்த வாரம் நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஆரம்பிக்கவுள்ள நிலையில் Poilievre தனது புதிய தலைமைக் குழுவை செவ்வாயன்று அறிவித்துள்ளார்.
இதில் ஒன்பது முக்கிய நியமனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Poilievre இன் தலைமைக் குழுவில் நீண்டகால Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Tim Uppal, Melissa Lantsman ஆகியோர் துணைத் தலைவர்களாக பணியாற்றுவார்கள்.
இந்த தலைமை குழுவில் கட்சியின் முன்னாள் தலைவர் Andrew Scheer பணியாற்றவுள்ளார்.
ஆனாலும் அண்மைய கட்சி தலைமை போட்டியில் ஈடுபட்ட எவரும் புதிய தலைமை குழுவில் இடம்பெறவில்லை.