தேசியம்
செய்திகள்

குடும்பங்களை இலக்காகக் கொண்ட மூன்று அம்ச திட்ட சட்டமூலம்: பிரதமர் Trudeau

தேசிய பல் பராமரிப்பு திட்டத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்துவதற்கான சட்டமூலத்தை தாக்கல் செய்வதாக பிரதமர் Justin Trudeau உறுதியளித்துள்ளார்.

இந்த சட்டமூலத்தில் வீடு வாங்குபவர்களுக்கான உதவி, GST தள்ளுபடியை இரட்டிப்பாக்குதல் ஆகியனவும் அடங்குகின்றன.

அடுத்த வாரம் புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் போது இந்த சட்டமூலம் அறிமுகமாகவுள்ளது.

இந்த சட்டமூலத்தில் இடம்பெறும் குறைந்தது முதல் சாதாரண வருமானம் உள்ள குடும்பங்களை இலக்காகக் கொண்ட மூன்று அம்ச திட்டத்தின் விவரங்களை பிரதமர் செவ்வாய்க்கிழமை (13) New Brunswick மாகாணத்தில் வெளியிட்டார்.

இந்தத் திட்டம் தனது கட்சியின் அழுத்தத்தினால் சாத்தியமானது என செவ்வாய் மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் NDP தலைவர் Jagmeet Singh உரிமை கோரியுள்ளார்.

Related posts

Edmonton காவல்துறை அதிகாரிகள் இருவர் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan

தடுப்பூசி பெற மறுத்ததால் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட மாகாண சபை உறுப்பினர்!

Gaya Raja

வர்த்தக அமைச்சர் Mary Ng நெறிமுறை விதிகளை மீறினார்!

Lankathas Pathmanathan

Leave a Comment