February 22, 2025
தேசியம்
செய்திகள்

Conservative புதிய தலைவர் திட்டமிட்டபடி அறிவிக்கப்படுவார்

Conservative கட்சியின் புதிய தலைவரை அறிவிக்கும் நிகழ்வு திட்டமிட்டபடி சனிக்கிழமை (10) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Conservative கட்சி தலைமை தேர்தல் ஏற்பாட்டுக் குழுவின் தலைவரான Ian Brodie ஒரு அறிக்கையில் இதனை தெரிவித்தார்.

மகாராணியின் மரணத்தின் பின்னர் மாற்றியமைக்கப்பட்ட திட்டத்துடன் புதிய தலைவர் அறிவிக்கப்படவுள்ளார்

மகாராணியின் மரணம் Conservative கட்சி அடுத்த தலைவரை எப்படி அறிவிக்க திட்டமிட்டுள்ளது என்பதை மறுபரிசீலனை செய்ய தூண்டியது.

ஆனாலும் மகாராணியின் மறைவுக்குப் பின்னர் கனடாவில் பல நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டாலும் புதிய தலைவரை அறிவிக்கும் நிகழ்வு திட்டமிடப்படி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல மாதங்கள் நீடித்த புதிய தலைவருக்கான பிரச்சாரத்தின் முடிவுகள் Ottawa Shaw Centrரில் சனிக்கிழமையன்று மாலை 6 மணிக்குப் பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Conservative கட்சியின் புதிய தலைவர் பதவிக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் Scott Aitchison, Pierre Poilievre, Leslyn Lewis, முன்னாள் Quebec முதல்வர் Jean Charest முன்னாள் Ontario மாகாண சபை உறுப்பினர் Roman Baber என ஐந்து வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Related posts

நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்திவைப்பது குறித்து பரிசீலிக்கவில்லை: அமைச்சர் Chrystia Freeland

Lankathas Pathmanathan

மீண்டும் தேர்தலில் போட்டியிடும் அமெரிக்க ஜனாதிபதியின் முடிவை Trudeau வரவேற்பு

Lankathas Pathmanathan

மீண்டும் 10 சதம் அதிகரிக்கும் எரிபொருளின் விலை!

Lankathas Pathmanathan

Leave a Comment