வேலையற்றோர் விகிதம் August மாதம் 5.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஏழு மாதங்களில் முதல் முறையாக வேலையற்றோர் விகிதம் அதிகரித்துள்ளது.
40 ஆயிரம் வேலைகளை பொருளாதாரம் இழந்த நிலையில் வேலையற்றோர் விகிதம் அதிகரித்துள்ளது.
பொதுத் துறையில் அனேகமான வேலை இழப்புகள் நிகழ்ந்ததாக கனடிய புள்ளி விபர திணைக்களம் தெரிவித்தது.
July மாதத்தில் வேலையற்றோர் விகிதம் 4.9 சதவீதமாக இருந்தது.
ஆகஸ்ட் மாதத்தில் சராசரி ஊதியம் ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்ததை விட 5.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது July மாதத்தில் 5.2 சதவீதமாக இருந்தது.
பல கனேடியர்கள் ஓய்வு பெறும் வயதை அண்மிக்கும் நிலையில் நிறுவனங்கள் புதிய பணியாளர்கள் குறித்த சவால்களை தொடர்ந்து எதிர்கொள்ள நேரிடும் என புள்ளிவிவரத் திணைக்களம் எச்சரிக்கிறது.