February 23, 2025
தேசியம்
செய்திகள்

சிறுவர் ஆபாச படங்களை வைத்திருந்த விசாரணையில் தமிழர் கைது

Torontoவை சேர்ந்த 34 வயதான தமிழர் ஒருவர் சிறுவர் ஆபாச படங்களை வைத்திருந்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டார்.

ட்ரெவின் அசந்தராஜா, சிறார் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

சிறுவர் ஆபாச படங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடந்து வரும் விசாரணையின் ஒரு பகுதியாக கடந்த February மாதம் காவல்துறையினர் வீடொன்றில் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இந்த தேடுதலின் போது குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து ட்ரெவின் அசந்தராஜா கைது செய்தயப்பட்டார்.

சிறுவர் ஆபாச படங்களை தயாரித்தல், சிறுவர் ஆபாச படங்களை வைத்திருந்தல் போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

அவரது புகைப்படத்தை வெளியிட்ட Toronto காவல்துறையினர் மேலும் பலர் இவரினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அச்சம் தெரிவித்தனர்.

இவர் குறித்த தகவல் அறிந்தவர்கள் அநாமதேயமாக குற்றப் புலனாய்வாளர்களைத் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

Related posts

தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்ற கனடா

Lankathas Pathmanathan

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 500,000 குழந்தைகள் மருந்து

Lankathas Pathmanathan

மீண்டும் வட்டி விகித உயர்வை அறிவித்த கனடிய மத்திய வங்கி!

Lankathas Pathmanathan

Leave a Comment