கனடிய மத்திய வங்கி தனது முக்கிய வட்டி விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகளால் புதன்கிழமை (07) உயர்த்தியது.
இதன் மூலம் 2.5 சதவீதத்தில் இருந்து 3.25 சதவீதமாக முக்கிய வட்டி விகிதம் அதிகரிக்கிறது .
இந்த ஆண்டு ஐந்தாவது முறையாக முக்கிய வட்டி விகிதத்தை மத்திய வங்கி அதிகரித்துள்ளது.
பணவீக்கத்துடன் வங்கி தொடர்ந்து போராடி வரும் நிலையில் இந்த வட்டி விகித அதிகரிப்பு வெளியானது.
உக்ரைன் யுத்தம், COVID, கொந்தளிப்பான பொருட்களின் விலைகள் ஆகியவை பணவீக்கத்தின் முக்கிய இயக்கிகள் என மத்திய வங்கி கூறுகிறது.
இந்த நிலையில் விரைவில் மற்றொரு அதிகரிப்பை மத்திய வங்கி எதிர்பார்க்கிறது.