தேசியம்
செய்திகள்

இந்த கல்வி ஆண்டு COVID தொற்றால் பாதிப்படையாது: Ontario கல்வி அமைச்சர் உறுதி

இந்த கல்வி ஆண்டு COVID தொற்றால் பாதிப்படையாது என Ontario மாகாண கல்வி அமைச்சர் Stephen Lecce உறுதியளிக்கிறார்.

செவ்வாய்க்கிழமை (06) முதல் Ontario மாகாணத்தின் கல்வி சபைகளில் மாணவர்கள் மீண்டும் பாடசாலைக்கு திரும்புகின்றனர்.

இந்த நிலையில் மாகாணத்தில் COVID தொற்று அதிகரித்தாலும் June இறுதி வரை மாணவர்கள் வகுப்பறையில் இருப்பார்கள் என கல்வி அமைச்சர் உறுதியளித்தார்.

தனது அலுவலகத்தின் முன்னுரிமை மாணவர்களை பாடசாலைகளில் தொடர்ந்து வைத்திருப்பது என Lecce கூறினார்.

மாணவர்கள் நேரில் கற்றுக்கொள்வதற்கான இடையூறுகளைத் தணிக்கும் வகையில், பாதுகாப்பு நெறிமுறைகள் தலைமை  சுகாதார மருத்துவ அதிகாரியால் வடிவமைக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

2020ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல்முறையாக, COVID கட்டுப்பாடுகள் ஏதுமின்றி, இலையுதிர்காலத்தில் மாணவர்கள் இன்று முதல் வகுப்பறைக்குத் திரும்புகின்றனர்.

Related posts

ஈரான் முன்னாள் அமைச்சருக்கு கனடாவில் தற்காலிக வதிவிட உரிமை மறுப்பு

Lankathas Pathmanathan

P.C. மாகாண சபை குழுவில் இருந்து விலக்கப்பட்டது குறித்து MPP ஏமாற்றம்!

Lankathas Pathmanathan

Ontarioவில் ; தொடர்ந்து இரண்டாவது நாளாக 200க்கும் குறைவான தொற்றுக்கள்!

Gaya Raja

Leave a Comment