COVID தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கட்டாய ஐந்து நாள் தனிமை விதிகளை Ontario மாகாணம் நீக்குகிறது.
Ontario மாகாண தலைமை மருத்துவ அதிகாரி Dr. Kieran Moore புதன்கிழமை (31) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அறிகுறிகள் முடிந்து 24 மணிநேரத்திற்குப் பின்னர் பாடசாலைக்கு அல்லது வேலைத் தளத்திற்கு திரும்பலாம் என அவர் கூறினார்.
ஒருவர் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்த பின்னர் 10 நாட்களுக்கு முக கவசத்தை அணிய வேண்டும் என தெரிவி்த்த Dr.Moore, அவ்வாறு செய்வது கட்டாயமில்லை எனவும் கூறினார்.