Newfoundland மாகாண எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் எட்டுப் பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் ஒருவர் நிலை ஆபத்தாக உள்ளது என RCMP தெரிவித்தது.
இந்த வெடிப்பு வெள்ளிக்கிழமை (02) உள்ளூர் நேரப்படி மாலை 4 மணியளவில் நிகழ்ந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை இயக்கும் நிறுவனமான Braya Renewable Fuels குறிப்பிட்ட வெடி விபத்தை உறுதி செய்தது.
ஆனால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என ஒரு அறிக்கையில் அந்த நிறுவனம் கூறியுள்ளது.