வெள்ளப் பேரழிவை எதிர்கொள்ளும் பாகிஸ்தானுக்கு 5 மில்லியன் டொலர் நிதியுதவியை கனடா அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கிற்கான மனிதாபிமான உதவி முயற்சியில் கனடிய மத்திய அரசு 5 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கும் என கனடிய வெளிவிவகார அமைச்சு திங்கட்கிழமை (29) அறிவித்தது.
இந்த நிதியுதவி நம்பகமான, அனுபவம் வாய்ந்தவர்களின் பணியை ஆதரிக்கும் என வெளிவிவகார அமைச்சு கூறுகிறது.
பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளும் குடிமக்களுக்கு கனடிய மத்திய அரசு கடந்த சனிக்கிழமை பயண எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டது.
பயணிகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்த எச்சரிக்கையில் அறிவுறுத்தப்பட்டது.