Mississauga நகர வங்கி கொள்ளை குறித்த குற்றச்சாட்டில் தமிழர் ஒருவரை Peel பிராந்திய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Mississaugaவைச் சேர்ந்த 30 வயதுடைய தாமிரன் அமிர்தகணேசன் என்பவர் மீது குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (23) மதியம் 2:00 மணியளவில், Mississauga நகரின் Derry வீதி மேற்கு McLaughlin வீதிக்கு அருகாமையில் உள்ள வங்கி ஒன்றில் அவர் கொள்ள முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவர் மீது மாறுவேடத்தில் கொள்ளை முயற்சி குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.