தேசியம்
செய்திகள்

Ontario Science Advisory Table அடுத்த மாதம் கலைக்கப்படுகிறது

COVID தொற்று பிரதிபலிப்பு குறித்த சுயாதீன ஆலோசனை குழுவான Ontario Science Advisory Table அடுத்த மாதம் கலைக்கப்படுகிறது.

தமது குழு எதிர்வரும் 6ஆம் திகதி முதல் கலைக்கப்படும் என உறுதிப்படுத்தும் அறிக்கையை Ontario Science Advisory Table வெள்ளிக்கிழமை (26) வெளியிட்டுள்ளது.

COVID தொற்றுக்கான பிரதிபலிப்பு குறித்து தன்னார்வ விஞ்ஞானிகள், பொது சுகாதார நிபுணர்களின் குழு, Ontario Science Advisory Table என்ற பெயரில் இயங்கி சுயாதீன ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

எதிர்வரும் 6ஆம் திகதி முதல் தமது குழு கலைக்கப்படும் என கடந்த வாரம் Ontario பொது சுகாதார மையம் அறிவித்தாக வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் Ontario Science Advisory Table தெரிவித்தது.

தமது பணி நிறுத்தப்படுவதாக அவர்கள் கூறினாலும், Doug Ford அரசாங்கம் அதை மறுக்கிறது.

இந்த குழுவினால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் Ontario பொது சுகாதார மையத்தால் ஏதேனும் ஒரு வடிவத்தில் தொடரும் என முதல்வர் Doug Ford வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

Related posts

Montreal தீ விபத்தில் 6 பேரை காணவில்லை!

Lankathas Pathmanathan

நாளாந்தம் மாறும் AstraZeneca தடுப்பூசியின் பயன்பாடு

Gaya Raja

Ontario மாகாண சபையின் கோடைகால அமர்வு நிறைவுக்கு வந்தது!

Lankathas Pathmanathan

Leave a Comment