2068ஆம் ஆண்டில் கனடாவின் மக்கள் தொகை 57 மில்லியனாக அதிகரிக்கலாம் என எதிர்வு கூறப்படுகிறது.
இந்த நிலை, வீட்டு வசதி திட்டங்கள், சுகாதாரத் தேவைகளில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த திங்கட்கிழமை (22) வெளியிடப்பட்ட கனடிய புள்ளியியல் திணைக்கள அறிக்கை, 2043 ஆம் ஆண்டில் கனடாவின் மக்கள் தொகை 47.8 மில்லியனாகவும், 2068 ஆம் ஆண்டில் 56.5 மில்லியனாகவும் இருக்கும் என கணித்துள்ளது.
2068ஆம் ஆண்டில் கனடாவின் மக்கள் தொகை 44.9 மில்லியனுக்கும் 74.0 மில்லியனுக்கும் இடையில் அதிகரிக்கக்கூடும் என மற்றொரு மக்கள் தொகை கணிப்பு சுட்டிக் காட்டுகிறது.