தேசியம்
செய்திகள்

கொலை குற்றச்சாட்டு சந்தேக நபரான தமிழர் கைது

கொலை குற்றச்சாட்டில் கனடா முழுவதும் தேடப்பட்ட தமிழர் புதன்கிழமை (24) கைது செய்யப்பட்டார்.

Scarboroughவில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் 34 வயது தமிழரான சதீஸ்குமார் ராஜரத்தினம் என்பவர் சந்தேக நபராக Toronto காவல்துறையினரால் அடையாளம் கண்டனர்.

38 வயதான ஒருவரின் மரணம் குறித்த குற்றச்சாட்டில் Ryan என்ற பெயரால் அறியப்படும் சதீஸ்குமார் ராஜரத்தினம் மீது குற்றச்சாட்டு பதிவானது.

இவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டதாகவும், இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

இவர் வியாழன் காலை தனக்கு எதிரான குற்றத்தை நீதிமன்றத்தில் எதிர்கொண்டார்.

Related posts

கனடாவில் 5,713 புதிய COVID தொற்றுகள் பதிவாகின

Lankathas Pathmanathan

மக்கள் தொகை வளர்ச்சியில் கனடா புதிய சாதனை

Lankathas Pathmanathan

உக்ரேனியர்களை அழிக்க ரஷ்யா விரும்புகிறது: கனடிய நாடாளுமன்றத்தில் உக்ரேனிய ஜனாதிபதி

Lankathas Pathmanathan

Leave a Comment