உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் விடையத்தில் கனடா உறுதியாக இருக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சர் Melanie Joly தெரிவித்தார்.
உக்ரைன் அரசாங்கத்திற்கு அதிக கனரக பீரங்கி, மனிதாபிமான உதவி, நிதி உதவிகளை வழவதன் மூலம் கனடா உக்ரைனுக்கு தொடர்ந்தும் உதவுமென அவர் கூறினார்.
உக்ரைன் தனது சுதந்திர தினத்தையும் ரஷ்யாவின் படையெடுப்பின் ஆறு மாத நிறைவையும் குறிக்கும் நிலையில் கனடிய வெளியுறவு அமைச்சரின் இந்தக் கருத்து வெளியானது.
உக்ரையியர்கள் போரில் சோர்வடையாமல் இருப்பது அவசியமெனவும் அமைச்சர் Joly கூறினார்.
அதேவேளை உக்ரேனிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கனடிய நாடாளுமன்றம் புதன்கிழமை (24) மாலை நீலம், மஞ்சள் நிறத்தில் விளக்கேற்றப்பட்டது.
ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்கொண்ட உக்ரைனின் தைரியத்திற்கு பிரதமர், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முதல்வர்கள் அஞ்சலி செலுத்தினர்.
உக்ரேனின் 31ஆவது ஆண்டு சுதந்திரத்தை 1.4 மில்லியன் உக்ரேனிய கனேடியர்களில் கொண்டாடினர்.
1991இல் உக்ரைனின் சுதந்திரத்தை அங்கீகரித்த முதல் மேற்கத்திய நாடு கனடாவாகும்.