கனடாவின் உச்ச நீதிமன்றத்திற்கு Ontario நீதிபதி Michelle O’Bonsawin நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் Justin Trudeau வெள்ளிக்கிழமை (19) இந்த நியமனத்தை அறிவித்தார்.
கனடாவின் உச்ச நீதிமன்றத்தில் அமர்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முதற்குடி நபர் இவராவார்.
இந்த நியமனம் நாட்டின் நீதி அமைப்பின் மிக உயர்ந்த மட்டத்தில் ஒரு முக்கிய பங்கை நிரப்புவதாக கொண்டாடப்படுகிறது.
O’Bonsawin 2017 முதல் Ottawaவில் உள்ள Ontario உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து வருகிறார்.