ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இருந்து புலம்பெயர் அமைப்புகள் சில நீக்கப்பட்டதை கனடிய தமிழர் பேரவை வரவேற்றுள்ளது.
கடந்த முதலாம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் 6 புலம்பெயர் தமிழ் அமைப்புகள், 316 தனி நபர்கள் மீதான தடையை ஸ்ரீலங்கா அரசாங்கம் நீக்கியிருந்தது.
இதில் CTC எனப்படும் கனடிய தமிழர் பேரவையும் அடங்குகிறது.
கனடாவில் தடை நீக்கம் செய்யப்பட்ட ஒரே அமைப்பு கனடிய தமிழர் பேரவை ஆகும்.
ஆனால் பல தமிழ், முஸ்லிம் அமைப்புகள், தனி நபர்கள் தொடர்ந்தும் தடை பட்டியலில் இருப்பது ஏமாற்றமளிக்கிறது என கனடிய தமிழர் பேரவை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கிறது
உறுதியான தொடர் நடவடிக்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்தைக் கனடிய தமிழர் பேரவை தனது அறிக்கையில் வலியுறுத்துகிறது.