Ontario மாகாணம் முழுவதும் பல்வேறு நகரசபை பதவிகளுக்கு போட்டியிட வேட்பாளர்கள் தமது நியமனங்களை பதிவு செய்ய வேண்டிய இறுதி திகதி வெள்ளிக்கிழமையாகும்.
வெள்ளிக்கிழமை (19) மாலை 2 மணி வரை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் தமது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்
இம்முறை தேர்தலில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கையும் 2018ஆம் ஆண்டை விட மிகக் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று மாத வேட்புமனு தாக்கல் காலத்திற்குப் பின்னரும் சில தொகுதிகளில் ஒரு வேட்பாளர் மட்டுமே பதிவு செய்துள்ள நிலை தோன்றியுள்ளது
இதனால் சில தொகுதிகளில் பதவிகளுக்கான நியமனங்கள், போட்டியின்றி நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழர்கள் பல தொகுதிகளில் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிடும் தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்த சில தமிழர்கள் தமது மனுக்களை மீளப் பெற்றுள்ளனர்.